வெள்ளி, 25 நவம்பர், 2016

அவசரப்படாமல் செயல்பட உதவும் பழமொழி இது !!





எந்தக்காரியம் செய்யும்போதும் அவசரப்படாமல்செய்ய வேண்டியது 
மிகமிக அவசியம் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

உங்கள் அனைவருக்கும் இனிய காலை 
வணக்கங்கள்.


எல்லாப்புகழும் இறைவனுக்கே !!



எந்த  ஒரு காரியத்தையும் நாம் பதறாமல் அவசரப்படாமல்எதையும் 
முந்திக்கொண்டு செயல்படாது, நிதானத்துடன் இருக்க வேண்டியது மிகமிக அவசியம். இதுபோன்ற நேரங்களிளில் எனது தந்தையார் எனக்கு சொல்லிச்சென்ற பழமொழியை நேயர்களிடம் பகிர்ந்து கொள்வதில் நான் 
மிகவும் மகிழ்ச்சியும் மன நிறைவும் அடைகிறேன்.            

இப்போது பழமொழி என்ன என்று பார்ப்போமா நேயர்களே !!                                 


மதுரைலே குளிக்கிறதுக்கு மானாமதுரைலேயே
துண்டை இடுப்புலே கட்டினா மாதிரில்ல இருக்கு !!.   



நன்றி !!                                               

வணக்ம் !!.                                          

அன்புடன் மதுரை டி.ஆர்.பாலு.

வியாழன், 4 ஆகஸ்ட், 2016

மூத்தவர்கள் சொல்/அறிவுரை என்பது எப்படி இருக்கும் ?







மூத்தவர்கள் சொல்/அறிவுரை !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!

எல்லாப்புகழும் இறைவனுக்கே !!


வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் 
நமக்கு அருளும்/வழங்கும் அறிவுரை 
என்பது எப்படி இருக்கும் ? என்பதற்கு 
அந்தக்காலத்தில் வழங்கப்பட்ட ஒரு 
பழமொழி இதுதான் :-

மூத்தோர் சொல்லும் முது நெல்லிக்காயும் 
முதலில் கசக்கும் !!
முடிவில் இனிக்கும் !!

இன்றைய இளைய சமுதாயம், அதில் வாழ்ந்து 
வரும் இளைஞர்கள் தாங்கள் பொருள் ஈட்டத் 
தொடங்கியவுடன், வயதிலும் அனுபவத்திலும் 
மூத்த தாய்,தந்தை மற்றும் உறவுகளில் வயதில் 
பெரியோர்கள்ஆகியோர்தரும்அறிவுரைகளை  
கேட்பதும் இல்லை மதிப்பதும் இல்லை. அப்படி அவர்களைக் கலந்து ஆலோசிக்காமல் இளைஞர்கள் எடுக்கின்ற எந்த முடிவுகளும் சிறப்பாகவும் நிறைவாகவும் இருந்தது இல்லை.
அதனால்தான் அக்காலங்களில் எல்லோரும் கூட்டுக்குடும்பமாக, குடும்பத்தலைவரின் ஆலோசனைப்படி மட்டுமே அனைவரும் செயல்பட்டு வந்தனர். குடும்பமும் அமைதியாக ஆரோக்கியமாக, நிம்மதியாக இருந்தது. ஆனால் இன்றோ திருமணம் முடிந்தவுடன், தனிக்குடித்தனம் செல்வது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிப்போன காரணத்தால், மேலே குறிப்பிட்ட பல்வேறு குழப்பங்கள், இக்கால இளைஞர்களின் வாழ்க்கையில் ஏற்படுவது என்பது வாடிக்கையான விஷயமாக ஆகிவிட்டது.

எனவே கட்டுரையில் முடிவாக நான் இக்கால இளைஞர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள், என்னவெனில்வயதில் மூ த்தவர்களை மதித்து , பெற்ற தாய்,தந்தையரின் அறிவுரைப்படி இனியாகிலும் நடந்து உங்கள் வாழ்வை வளம் நிறைந்ததாக மகிழ்ச்சியாக நடத்திக்கொள்ள வேணுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டு விடைபெறுகிறேன்.

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். மதுரை. T.R.பாலு.


சனி, 30 ஜனவரி, 2016

இந்தப் பழமொழிக்கு உண்டான உண்மையான அர்த்தம் இதுதான் !!





            நாட்டுப்புறப் பழமொழிகள் !!

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

வணக்கம். கடந்த மூன்று மாதங்களாக நான் 
இந்த இடுகையில் எவ்விதமான பதிவுகளையும் 
செய்திட இயலாமல் போனதற்காக வாசகர்கள் 
அனைவரிடமும் நான் மன்னிப்புக் கோறுகிறேன்.


இதற்கு காரணம், இதுதவிர ஏனைய மற்ற இடுகைகள் பலவற்றில் எனது கவனமும் சிந்தனையும் இருந்த ஒன்றுதான் என்பதை பணிவுடன் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

இன்றையதினம் நான் எடுத்துக்காட்டிட உள்ள 
நாட்டுப்புற பழமொழி இதோ இதுதான் :-

அரசனை நம்பி புருஷனை கைவிடக்கூடாது !!
மேலோட்டமாக, இதைப்பார்க்கும்போது நாம் என்ன மனதில் நினைக்கத் தோன்றும் என்றால், ஒரு பெண்ணுக்கு ஏதோ அரசனின் ஆதரவு கிடைத்துவிட்டது போலவும், ஆகவே அவள் 
தனது புருஷனை கைவிடக்கூடாது அல்லது அவனை விட்டு விலகிடக்கூடாது என்றே எண்ணிடத்தோன்றும். ஆனால் உண்மைப் பொருள் அதுவல்ல. 

உண்மைப்பொருள் , இதுதான் அன்பர்களே !!

குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அக்காலங்களில் விரதம் இருந்து அரச மரத்தைச்சுற்றி வந்தால்,அங்கே வீசுகின்ற காற்று, பெண்களின் கர்ப்பபையில் 
குழந்தை உருவாவதைத் தடுக்கின்ற கிருமிகளை துவம்சம் செய்து/அழித்து அவள் குழந்தைப்பேறு அடைவதற்கு வழிவகுக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

ஆனால், அதற்காக, பெண்கள் தங்கள் தங்கள் 
கணவன்மார்களை உதாசீனம் செய்திடல் ஆகாது அப்படி புருசன்மார்களை விட்டு விலகிவிடக்கூடாது என்ற கருத்தை வலியுறுத்திடும் வண்ணமாகவே மேலே சொன்ன பழமொழி புழக்கத்தில் இருந்தது.

அரசனை நம்பி (அரச மரத்தை நம்பி ) புருஷனை கைவிடக்கூடாது !!

நன்றி !! வணக்கம் !!

அன்புடன். திருமலை.இரா.பாலு.

வியாழன், 19 நவம்பர், 2015

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்..... பழமொழிக்கு உண்மையான விளக்கம் !!







பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!


அஸ்ஸலாமு அலேக்கும் !!


அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!


அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் வணக்கம் !!

மிக நீண்டதோர் இடைவேளைக்குப் பிறகு
உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான்
மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று
நான் உங்களுக்கு விரிவுரை தர இருக்கும்
நாட்டுப்புற பழமொழி இதுதான் :-

ஊரார் புள்ளைய ஊட்டி வளர்த்தால்
தன் புள்ளை தானே வளரும்.

பொதுவாக நம்மில் 95 விழுக்காடுகளுக்கு
மேல் உள்ளவர்கள் இந்த நாட்டுப்புற பழ-
மொழிக்கு அர்த்தம் இதுவாகத்தான் இங்கே
உணர்ந்திருப்பார்கள்.

அதாவது, நம் அக்கம்பக்கத்துவீட்டினில்
இருக்கும் பிள்ளைகளுக்கு நாம் அவர்கள்
விரும்பிடும் பொருட்களை உண்ண தந்தால்
நம் வீட்டில் உள்ள நமது பிள்ளை நன்றாக,
ஆரோக்கியமாக வளருவான் என்றே நாம்
இதுவரை நினைத்து இருந்தோம்.

ஆனால் உண்மையான பொருள் அதுவல்ல.
அவ்வாறென்றால் உண்மைப் பொருள் என்ன ?
உங்களது கேள்விக்கு பதில் இதோ :-

நம் வீட்டிற்கு வரும் மருமகள், அவள் ஊரார்
பெற்ற பிள்ளை. அவள் திருமணம் ஆகி நமது
வீட்டிற்கு வந்தபின்பு கர்ப்பம் தரிக்கும் போது
அவளது வயிற்றில் வளரும் குழந்தை அது
நம் குழந்தை. ஆக ஊரார் பிள்ளைக்கு (அதாவது

மருமகளுக்கு) நல்ல ஊட்டச்சத்து மிக்க உணவு
வகைகளை நாம் ஊட்டி வளர்த்தால், அவளது
வயிற்றினில் வளர்ந்து வரும் நமது பிள்ளை
( பேரனோ அல்லது பேத்தி ) தானே வளரும்
என்னும் அர்த்தத்தினில் மட்டுமே இந்த நல்ல
பழமொழி பயன்படுத்தப்பட்டது. இதை நீங்கள்
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்றே
இந்தக் கட்டுரைதனை நான் எழுதினேன்.


நன்றி !! வணக்கம் !!

அன்பன். திருமலை.இரா.பாலு.

சனி, 24 அக்டோபர், 2015

அர்த்தங்கள் நிறைந்த அந்தக்கால பழமொழிகள் !! இவைகள் நமக்கு பொன்மொழிகள் !!










  பழமொழிகள் !!  பொன்மொழிகள் !!







   சோழியன் குடுமி சும்மா ஆடாது !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!


அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்.

இன்றைய தினம்  " நாட்டுப்புற பழமொழிகள் "

பகுதியில் நான் குறிப்பிட விரும்புகின்ற ஒரு

பழமொழி என்னவென்றால் :-


சோழியன் குடுமி சும்மா ஆடாது !!

என்பதைப் பற்றித்தான். நம்மில் அனைவரும்

இதுவரை இந்தப் பழமொழிக்கு அறிந்துகொண்ட

அர்த்தம் என்னவென்றால், சோழியன்என்பவரின்

குடுமி, சும்மா ஆடாது, ஏதாவது தனக்குச்

சாதகமான நிலையில்மட்டுமேஆடும்என்றுதான்

அறிந்து வந்திருக்கிறோம்.  

ஆனால் உண்மைப்பொருள்அஃது அல்ல. 

உண்மை அர்த்தம் இதோ உங்களுக்காக :-



சோழியர்கள் என அழைக்கப்படுபவர்கள் 

திருக்கோவிலில் ஊழியம்செய்து வாழ்க்கை 

நடத்தி வந்தவர்களே. இவர்கள்மட்டுமே 

கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும்

வேளையில் புனித நீர் அடங்கிய கும்பங்களை

கோவிலின் உச்சிக்கு கொண்டுசென்றுஅதன்பின் 

அதில் அமைந்து உள்ள கலசங்களின் மீது அந்த 

குடங்களில் உள்ள புனிதநீரைதெளிப்பதற்கு, 

இவர்கள் ( சோழியர்கள்) மட்டுமே காலம் 

காலமாக உரிமை பெற்றவர்கள். ஆனால் அந்த 

புனிதநீர் அடங்கிய கும்பங்களை ( குடங்களை) 

வெறும் தலயில் மீது வைத்து எடுத்துச் செல்லக் 

கூடாது.எனவே அதற்கு பிரிமனை என்னும்வட்ட 

வடிவிலான சும்மாடு என்று அழைக்கப்படும்ஒரு 

தாங்கும் பொருள் ஒன்றினைதலைமீதுவைத்துக்

கொண்டு அதன்மீதுகும்பங்களைவைத்துக்

கொண்டு அது கீழே விழுந்து விடாமல், 

கவனமாகப் பிடித்துக்கொண்டுகோபுரத்தின் 

உச்சிக்கொண்டு செல்ல வேண்டியது 

இவர்களின் கடமை. பொதுவாகவே அனைத்து 

சோழியர்களும் நீண்ட குடுமி வைத்து 

இருப்பார்கள்.

ஒரு கும்பாபிஷேகம் நடைபெறுகின்றபோது 

அந்தக் கோவிலில் உள்ள ஆறு கலசங்களிலும் 

தெளித்திட புனிதநீர் அடங்கிய  6 கும்பங்களை 

சுமந்து செல்ல ஆறு சோழியர்கள்வந்திருந்தனர். 

அவர்களில் 5 பேர்கள் மட்டும் பிரிமனையுடன் 

வந்திருந்தனர். ஒரே ஒருவர் மட்டும் எடுத்துவர 

மறந்துவிட்டார். கும்பபிஷேகத்திற்கான நேரம் 

நெருங்கி விட்டது. அவரால் வீடுவரை சென்று 

பிரிமனையை எடுத்துவரவும் இயலவில்லை.

எனவே அவர் தலைமை ப்ரோகிதரிடம் சென்று 

பிரிமனை எடுத்துவர மறந்து விட்டேன் ஆகவே 

நான் எனது குடுமியை சும்மாடு போல சுற்றி 

வைத்துக்கொண்டு அதன் மீது புனிதநீர் உள்ள 

கும்பங்களை கோபுர உச்சிக்குகொண்டுசென்றிட 

பயன்படுத்திக்கொள்ள சம்மதிப்பீர்களா ? என்று 

வினவினார். அதற்கு முற்றிலும் ப்ரோகிதர் 

மறுத்ததோடு மட்டுமில்லாது, அவர் என்ன 

சொன்னார் தெரியுமா ?

சோழியன் குடுமி சும்மாடு ஆகாது !!
என்று. இதுவே நாளடைவில் மருவி, மருவி, 

மாறி, மாறி எப்படி மாறியது என்று கேட்டால்:-

சோழியன் குடுமி சும்மா ஆடாது !!
என்று. 


இந்த வார்த்தை நுட்பத்தை நேயர்கள் 

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் 

என்ற காரணத்தினால், நான் அதனை இங்கே 

சற்று விரிவாகவும், விளக்கமாகவும் எழுதி 

உள்ளேன் என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



நன்றி. வணக்கம்.



அன்புடன். திருமலை.இரா.பாலு.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

அர்த்தங்கள் மாறிப்போன பழமொழிகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!








பிஸ்மில்லாஹிர்-ரஹ்மானிர்-ரஹீம் !!



அஸ்ஸலாமு அலேக்கும் !!



அல்லாஹூ-அக்பர்-அல்லாஹ் !!




அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!



அனைவருக்கும் வணக்கம்.  இன்றையதினம் 


அர்த்தங்கள் உருமாறிப்போன பழமொழிகள்


பற்றிய விரிவான விளக்கத்தை இன்று நாம் 


பார்ப்போமா நேயர்களே ?



அப்படிப்பட்ட பல உருமாறிப்போன பல்வேறு 


பலமொழிகளுள் ஒன்றுதான் கீழ்க்கண்ட 


பழமொழியும் :-



சட்டியில் இருந்தால்தானே !!

அகப்பையில் வரும் !!


இந்த பழமொழிக்கு பொதுவாக நாம் இதுவரை 


உணர்ந்த அர்த்தம் யாதெனின் :-



சோத்துப்பானை சட்டியில் (சோறு) 


இருந்தால்தானே அகப்பையில் சோறு வரும் !!



என்றுதான் நாம் உணர்ந்திருந்தோம். ஆனால்


உண்மை அர்த்தம் அதுவல்ல.



மழலைச் செல்வம் என்று சொல்லும் குழந்தைச் 


செல்வம் இல்லாதவர்கள், கந்தர் சஷ்டியில் 


குழந்தையை வேண்டி விரதம் இருந்தால் 


அகப்பையில் (கருப்பையில்) வரும் 


குழந்தை !!



என்னும் பொருளில்தான் நமது முன்னோர்கள் 


இந்தப் பழமொழியை உலகுக்கு வழங்கி 


இருந்தார்கள்.



எனவே இனிமுதற்கொண்டாவது நாம் சரியான 


அர்த்தத்தை பொருளாக உணர்ந்திடுவோம்.



நன்றி !!  வணக்கம் !!



அன்புடன். திருமலை.இரா.பாலு.



( மதுரை T.R. பாலு )